search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காபி டீ"

    தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.
    காலை எழுந்தவுடன் சுடச்சுட டீ அருந்துவது தான் அனைவருக்கும் பிடித்தமானது. தேயிலை கொண்டு தயாரிக்கப்படுவதை மட்டுமே டீ என அழைப்பதில்லை. வேறு பல பசுந்தழைகள் கொண்டு கொதிக்க வைத்து தரப்படும் சுவையான சுடுநீர் கூட டீ என்றுதான் அழைக்கப்படுகிறது. உலகெங்கும் விதவிதமாக டீ குடிக்கும் பழக்கம் உள்ளது.

    தேயிலையிலேயே மாறுபட்ட சில வகைகளை கொண்டும் தேநீர் உருவாக்கி தரப்படுகிறது. அவற்றிற்கு என தனி மதிப்பும், சிறப்பு குணங்களும் உள்ளன. அந்த வகையில் சில பொருட்கள் கொண்டும் தேநீர் தயாரிக்கப்பட்டு தரப்படுகிறது. இப்பொருட்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து தருவதை நம் முன்னோர் குடிநீர் என்றும், கசாயம் என்றும் அழைத்து வந்தனர். மாடர்ன் உலகில் எந்த மூலிகையும், பசுந்தழையும் போட்டு கொதிக்க வைத்து பரிமாறினால் அது தேநீர் வகையில் இணைக்கப்படுகிறது.

    தேயிலை தவிர்த்து இஞ்சி, புதினா, கிரீன் டீ, லாவண்டர், செம்பருத்தி, ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை, ரோஸ்ஹிப், லெமன் பாம், நெட்டில், ஹாதோரன் போன்ற விதவிதமான பொருட்களை கொண்டு டீ தயாரித்துத் தரப்படுகிறது. சில நம் நாட்டு மூலிகை மற்றும் செடிகளாக காணப்படுகிறது. சில அயல்நாட்டில் கிடைக்கக்கூடிய விதைகள், பழங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது.

    எலுமிச்சை புல் தேநீர்

    எலுமிச்சை புல் தேநீர் என்பது நாம் உணவு அருந்தியபின் குடிக்க வேண்டிய தேநீர். எலுமிச்சை புல்-யை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்தபின் குடித்திட வேண்டும். இந்த தேநீரில் உள்ள சிட்ரல் குண அமைப்பு உணவு செரிமானம் அடைவதற்கு உதவி புரிகிறது. நல்ல வாசம் மிகுந்த தேநீரான இது அனைவருக்கும் பிடித்தமானது.

    பயன் நிறைந்த கிரீன் டீ

    கிரீன் டீ என்பது பிரபலமான மூலிகையாகும். இதன் தேநீரில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. இதன் மூலம் உடலின் வயதான தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும். புற்றுநோய் மற்றும் கட்டிகள் ஏற்படுவதை தடுப்பதுடன் உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

    இளஞ்சூடான இஞ்சி தேநீர்

    இஞ்சி உடல் சக்தியை அதிகரிப்பதுடன், புத்துணர்வை அதிகரிக்க செய்ய உதவுகிறது. உணவு செரிமானம் அடையவும், வாய் குமட்டலை தடுக்கவும் இஞ்சி தேநீர் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த இஞ்சி தேநீர் அருந்துவது முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது.

    புத்துணர்வுடன் கூடிய புதினா தேநீர்

    நறுமணத்துடன் கூடிய தேநீர் - ஆக புதினா தேநீர் உள்ளது. இது குமட்டல், வாந்தி மற்றும் மலச்சிக்கலை தீர்க்கும் தேநீர் ஆக உள்ளது. மேலும், உடல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதுடன், சளி தொந்தரவுகள், ஆஸ்துமா மற்றும் தலைவலி போன்றவற்றை நீக்கும் விதமாகவும் அருந்திடலாம். இதய நோயாளிகள் புதினா தேநீர் அருந்துவதை தவிர்த்திடல் வேண்டும்.

    சீமை சாமந்தி தேநீர்

    கெமோமில் என்ற சீமை சாமந்தி என்ற மூலிகை உலகளவில் மிக பிரபலமான ஒன்றாகும். இது மன அழுத்தம் மற்றும் வயதான தோற்றத்தை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் தூக்கமின்மையை போக்கி நல்ல தூக்கத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. உலகளவில் ஆர்கானிக் சீமை சாமந்தி தேநீர் தயாரிப்புகள் தயார் செய்து விற்பனைக்கு வருகின்றன.

    ரோஸ் ஹிப் தேநீர்

    ரோஜா செடியில் இருந்து கிடைக்கும் பழம் போன்ற பகுதியே ரோஸ் ஹிப் என்பதாம். இதனை கொண்டும் தேநீர் உருவாக்கப்படுகிறது. விட்டமின்-சி சத்து நிறைந்த இந்த ரோஸ் ஹிப் தேநீர் அருந்துவதன் மூலம் சரும பளபளப்பு மற்றும் சீறுநீரக செயல்பாடு சிறப்பாக இருத்தல் போன்ற பயன்கள் ஏற்படுகிறது.

    இதயத்தை பலப்படுத்தும் செம்பருத்தி தேநீர்

    செம்பருத்தி பூவின் தேநீர் என்பது காய்ந்த செம்பருத்தி பூவினை கொண்டு தயாரிக்கப்படுகிறது. செம்பருத்தி தேநீர் அருந்துவதன் மூலம் உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவை குறைகின்றது. உடலில் செல் பாதிப்பு ஏற்படுவதை தடுப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாகவும் செம்பருத்தி தேநீர் உதவுகிறது.

    லாவண்டர் பூ தேநீர் என்பதும் உலகளவில் பிரபலமான தேநீர் ஆக உள்ளது. இதனை அருந்துவதன் மூலம் காய்ச்சல், இருமல், ஆஸ்துமா போன்றவை நீங்குகிறது. மேலும் ஆறாத புண்களை கொண்டுள்ளோர் லாவண்டர் தேநீர் அருந்திவர சீக்கிரமே ஆறிவிடும்.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது.
    காபியில் உள்ளடங்கி இருக்கும் காபின் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனினும் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு காபினின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. தினமும் இரண்டு கப் காபி பருகுவதன் மூலம் கல்லீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக 63 ஆயிரம் காபி பிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 45 வயது முதல் 74 வயதுக்கு உட்பட்டவர்கள். 15 ஆண்டுகளாக அவர்கள் பருகும் காபியின் அளவு பற்றி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது. அதில் 114 பேர் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார்கள்.

    இதையடுத்து காபி அதிக அளவிலும், குறைந்த அளவிலும் பருகுபவர்களை தரம் பிரித்து சாதக, பாதக அம்சங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இறுதியில் தினமும் இரண்டு கப் காபி பருகுவதுதான் உடல்நலத்திற்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும் என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்திருக்கிறார்கள்.

    அதேவேளையில் டீ, பழ ஜூஸ் போன்ற பானங்கள் பருகுவதற்கும் கல்லீரல் அழற்சி நோய்க்கும் சம்பந்தம் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதுதான் கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. உலகளவில் அமெரிக்கர்கள்தான் கல்லீரல் அழற்சி நோயால் அதிக அளவு பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

    சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். ஆனால் அடிக்கடி காபியை குடிப்பவர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.
    சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி மண்டையை உடைத்து விடுகின்றது என்பார்கள். காபியை அடிக்கடி அன்றாடம் குடிப்பவர்களுக்கு இருதய படபடப்பு, தூக்கமின்மை இவையெல்லாம் ஏற்படும். கர்ப்பிணி பெண்கள் முடிந்தால் காபியினை தவிர்த்து விடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது.

    காபி, டீ, கோகோ இவைகளில் காபின் என்ற பொருள் உள்ளது. இது சக்தியினை தூண்டி விடும் பொருள். காபியினை நிதான அளவில் குடிப்பவர்களுக்கு நடுக்குவாதம் எனப்படும் parkinsons நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன.

    அதே போல் அளவான காபி அருந்துபவர்களுக்கு மறதி நோய் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. சில ஆய்வுகள் காபின் மூளை வீக்கத்தினைக் கூட தவிர்க்கின்றது என்று கூறியுள்ளன. வீக்கமே பல நோய்களுக்கு காரணம் எனப்படும் நிலையில் காபீனில் உள்ள அமினோ அமிலங்கள் வீக்கங்களை குறைக்க உதவுவதாகவே சமீபத்திய ஆய்வு கூட கூறுகின்றது.

    நிதான அளவில் காபி குடிப்பவர்களுக்கு மனஉளைச்சல் குறைகின்றது. சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் ஆண்களுக்கு குறைகின்றது. ஆனால் சர்க்கரை நோய் பாதிப்பு அபாயம் காபி எடுத்துக் கொள்ளும் பெண்களுக்குக் கூடுகின்றது.

    நிதான அளவு காபி இருதய பாதிப்பினால் ஏற்படும் இருதய அபாயத்தினைக் குறைக்கின்றது. சில குறிப்பிட்ட வகை புற்று நோய்களையும் 27 சதவீதம் வரை குறைக்கின்றது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

    அப்படியென்றால் காபி நல்லதா? என்றால் நல்லது என்பதற்கு ஒரு அளவு கோல் இருக்கின்றது. இந்த, ஆய்வுகள் வெளி நாடுகளில் நடப்பவை. ‘சிக்கரி’ கலப்பு இல்லாதவை. காபி டிகாஷனும் அடர்த்தியாக இராது மெல்லியதாக இருக்கும். அவர்கள் குடிக்கும் காபியில் பால் கூட இராது. நம்ம ஊர் பழக்கம் அப்படி அல்ல.
    அடர்த்தியான டிகாஷன், தண்ணி கலக்காத அடர்த்தியான பால். காபி பொடி சிக்கரி கலந்தது. பல இடங்களில் காபி பொடியில் கலப்படங்கள் வேறு உள்ளன.

    டிகிரி காபி என்ற பெயரில் காபியினை கூழ் போல் ஒரு பெரிய டம்ளரில் குடிக்கின்றோம். அதுவும் ஒருமுறை அல்ல. அடிக்கடி குடிக்கின்றோம். இரவில் கூட காபி அருந்துபவர்கள் அநேகர் உண்டு. காலையிலும் வெறும் வயிற்றில் முதல் வேலையாக திராவகம் போல் இதனை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை ஊற்றுகின்றோம். அன்றாடம் சில முறை அல்லது பலமுறை இவ்வாறு செய்வதால் பின்பு தீமைகள் விளைகின்றன.

    காபி குடித்துத்தான் வாழ வேண்டும் என்ற அவசியம் மனிதனுக்குக் கிடையாது. அப்படி குடிக்கும் பழக்கம் இருந்தால் தரமான பொடியினை பயன்படுத்துங்கள். பகல் 12 மணிக்கு மேல் குடிக்க வேண்டும். காலை உணவுக்குப் பிறகோ அல்லது 11 மணி அளவில் 2 மாரி பிஸ்கட்டுடனோ அருந்துங்கள். டிகிரி காபி உங்கள் வயிற்றை புண்ணாக்கி விடும் என்பதனை உணருங்கள்.  
    ×